(THINA SEITHI -UK TAMIL NEWS) - கொரோனா வைரஸ் தாக்கம் உலகெங்கிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 206 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பிரித்தானியாவில் ஓரேநாளில் 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்றும் இதன்மூலம் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 206 ஆக அதிகரித்துள்ளது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கொரோனா வைரஸின் தாக்கமானது ஈஸ்டரில் உச்சம் அடைந்து ஆறு மாதங்களுக்கு நீடிக்கும், மில்லியன் கணக்கிலான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என பிரித்தானியாவை சேர்ந்த நுண்ணுயிரியலாளர் பீட்டர் பியோட் எச்சரித்திருந்த நிலையில் இந்த செய்தி வந்துள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மிகைப்படுத்தப்படவில்லை. பிரித்தானியாவில் ஏற்கனவே ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் வாரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
முன்னதாக மில்டன் கெய்ன்ஸில் 80 வயதான ஒரு முதியவரும், 70 வயதில் ஒரு பெண்ணும் என பிரித்தானியாவில் இரண்டு பேர் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment