Sunday, March 8, 2020

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரை தேடி சென்ற சி.ஐ.டி.க்கு ஏமாற்றம் - வீட்டில் இல்லாதமையால் தொடர்ந்தும் வலைவீச்சு...!

(THINA SEITHI - COLOMBO) - மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் விவகாரத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை கைது செய்யவதற்காக சி.ஐ.டி.யினர் தொடர்ந்தும் அவரை தேடி வருகின்றனர்.

ரவி கருணாநாயக்க, அர்ஜூன மகேந்திரன், அர்ஜூன் அலோசியஸ் உட்பட 10 சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் திகதி மற்றும் மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்ற பிணை முறிகள் ஏலத்தின போது நிகழ்ந்ததாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக சி.ஐ.டி. யினால் கோட்டை நீதவான் நீதிமன்றில் கடந்த புதன்கிழமை புதிய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலேயே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று சர்ச்சைக்குரிய மத்திய வங்கி மோசடி வழக்கில் 8 ஆவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முத்துராஜா சுரேந்திரன் கைது செய்யப்பட்டு மார்ச் 18 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இதனை அடுத்து முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சி.ஐ.டி.யினர் முன்னெடுத்திருந்தனர். 

அதற்கமைவாக பத்தரமுல்ல ரஜமல்வத்த பகுதியில் உள்ள வீட்டுக்கு அதிகாரிகள் சுமார் 45 நிமிடங்கள் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்த போதும் வீட்டில் ரவி கருணாநாயக்க இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment