தமிழ்நாடு பிரிமீயர் லீக்கின் 5-வது சீசன் ஜூன் 10-ஆம் திகதி முதல் கோவையில் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
( தின செய்தி- thina seithi) தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டிஎன்பிஎல் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு வருடா வருடம் நடைபெற்று வருகிறது .
இதுவரை நான்கு தொடர்கள் நடைபெற்றுள்ளன. அதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2 முறையும் (2017, 2019), டூட்டி பேட்ரியாட்ஸ் (2016), மதுரை பாந்தர்ஸ் (2018) ஆகியவை தலா ஒரு தடவையும் டிஎன்பிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளன.
8 அணிகள் பங்குபெறும் 5-வது டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவையில் ஜூன் 10-ஆம் திகதி டங்குகிறது. அன்று இரவு 7 மணிக்கு அங்குள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் - திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.இந்த போட்டி தொடரில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.
இறுதிப்போட்டி நெல்லையில் ஜூலை 12-ஆம் திகதி நடைபெறுகிறது. நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தனது லீக் ஆட்டங்களில் ஜூன் 14-ஆம் திகதி திருப்பூர் தமிழன்ஸ் அணியையும், ஜூன் 17-ஆம் திகதி திருச்சி வாரியர்ஸ் அணியையும், ஜூன் 19-ஆம் திகதி காஞ்சி வீரன்ஸ் அணியையும், ஜூன் 21-ஆம் திகதி மதுரை பாந்தர்ஸ் அணியையும், ஜூன் 28-ஆம் திகதி திண்டுக்கல் டிராகன்ஸ் அணியையும், ஜூலை 3-ஆம் திகதி சேலம் ஸ்பார்டன்ஸ் அணியையும், ஜூலை 5-ஆம் திகதி கோவை கிங்ஸ் அணியையும் சந்திக்கிறது.
Friday, March 6, 2020
Tamil-Sports-News
தமிழ்நாடு பிரிமீயர் லீக் ஜூன் 10ஆம் திகதி முதல் ஆரம்பம்..!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment