Friday, March 6, 2020

அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்- நடக்குமா ஐபிஎல் போட்டிகள்??

கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் உலுக்கி வரும் நிலையில், முக்கிய விளையாட்டு தொடரான ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி நடக்குமா?என்ற விவாதங்கள் எழுந்துள்ளது. 




(தின செய்தி-   thina seithi) கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொடிய வைரஸ் உலகம் முழுவதும் உயிர்பலி எடுத்து  வருகிறது. சீனாவில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதிலும் கிட்டதட்ட 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய சூழலில், இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்த  ஆண்டு திட்டமிட்ட படி நடக்குமா? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஏனெனில், ஐபிஎல் போட்டிகளைக் காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் மைதானத்தில் திரள்வார்கள்.  அதுபோக, வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க வருவார்கள். எனவே, போதுமான முன் எச்சரிக்கைகளுடன் ஐபிஎல் போட்டிகள் நடத்த வேண்டியது அவசியம்.

இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகள் நிச்சயம் நடக்கும் என்று தெரிவித்துள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி, ”முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஐபிஎல் தொடர் நடக்கும்” என்றார்.

 கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இத்தாலியில் சீரி ஏ கால்பந்து போட்டிகள் ரசிகர்கள் இல்லாமலேயே மூடப்பட்ட கதவுகளுக்குள் நடைபெற்று வருகின்றன. அதேபோல்,வரும் ஜூலை 4 ஆம் திகதி  தொடங்க உள்ள ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்குமா? என்பதும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வரும் 29 ஆம் திகதி தொடங்கி மே 24 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது .

No comments:

Post a Comment