இத்தாலியில் இருந்து அண்மையில் மெக்ஸிகோவிற்கு வந்த 71 வயதான ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஆறாவது நபராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அந்த நபர் மெக்ஸிகோவுக்கு மிகவும் மோசமான நிலையில் வருகை தந்ததாகவும், ஆனால் தற்போது அந்நிலையில் இருந்து ஓரளவு மீண்டுள்ளதாகவும் பிரதி சுகாதார அமைச்சர் ஹ்யூகோ லோபஸ்-கட்டெல் தெரிவித்தார்.
மேலும் குறித்த நபரின் குடும்ப உறுப்பினர்களில் இருவர் நோய்த்தொற்று தொடர்பான சோதனை செய்யப்பட்டுள்ளனர் என்றும் அதன் முடிவுகள் விரைவில் வெளியாகும் எனவும் பிரதி சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகளவில் இதுவரை 100,000 க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டுள்ளதுடன் 90 க்கும் மேற்பட்ட நாடுகளில் 3,400 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment