(THINA SEITHI - COLOMBO) - எதிர்வரும் பொதுத் தேர்தலில் 'யானை' சின்னத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.
அந்தவகையில், 22 தேர்தல் மாவட்டங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் கரியவாசம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணியில் களமிறங்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டது.
இருப்பினும் குறித்த கூட்டணியின் சின்னம் தொடர்பாக சஜித் பிரேமதாச தரப்பு மற்றும் ரணில் விக்ரமசிங்க தரப்புக்கு இடையில் தொடர்ந்தும் முரண்பாடு நிலவிவருகின்றது.
இதனிடையே, கடந்த வாரம் இடம்பெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் சஜித் பிரேமதாச பங்கேற்கவில்லை என்பதுடன் அவர் சார்பாக மலிக் விக்ரமரத்ன மட்டுமே கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
இதனால், தொடர்ந்தும் சஜித் தலைமையிலான கூட்டணியின் சின்னம் இறுதி செய்யப்படாத நிலையில் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி தனித்துப் போட்டியிட முடிவுசெய்துள்ளது.

No comments:
Post a Comment